"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை
பருத்திவீரன் கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்" எனக் கூறினார். அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார். மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது அமீர் இந்த விவகாரம் சம்மந்தமாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் "வணக்கம். நான் இயக்குனர் அமீர்.. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த...
