“நான் சொன்னத அவரு கேக்கல... இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” - நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!

 

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனுக்கு பிறகு முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாயகனாக கார்த்தி மாறினார். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது.


இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – - மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.


பருத்திவீரன் வெற்றி பெற்றபின்னர் இயக்குனர் அமீரை சந்தித்துள்ளார் சரவணன். அப்போது அமீர் அவரிடம் "இனிமேல் நீங்கள் ஹீரோவாக நடிக்காதீர்கள். இதுபோல குணச்சித்திர வேடம் அதிகமாக வரும். அதில் நடியுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் அமீர் பேச்சைக் கேட்காத சரவணன் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஆனால் அந்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகி அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்று தரவில்லை. அதனால் பருத்திவீரனின் வெற்றியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளார் சரவணன் என ஒரு நேர்காணலில் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை

ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது