உங்களுக்கு இதுபோல் நடந்துண்டா?

 


மலரும் நினைவுகள் பதிவு


இதெல்லாம்

சாத்தியமா

இன்று


கொஞ்சம் படித்து

பாருங்க நண்பர்களே


எவ்வளவு அழகான

வாழ்க்கையை

முப்பத்து இரண்டு

வருடத்திற்கு முன்பு

நாம் வாழ்ந்து வந்தோம்

இன்று அதை

நினைத்தாலே

மனசு சிறகடித்து பறக்கும்

அவ்வளவு இனிமையான

அமைதியான

ஆரோக்கியமான வாழ்க்கை


முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு............. 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️


FLASH BACK To....... 1990.....


மனதின் நினைவுகள்

ஓராயிரம்...

ஆனால்

ஏக்கம் நிறைவேறுமா?: 


நிம்மதியாக

வாழ எங்கேனும் ஒரு குக்கிராமம்! 

அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை !

 திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! 

உள்ளே போனால் ஒரு ரேழி,

அதைத் தாண்டிய பின்னர்

கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! 

அதையும் தாண்டி

கடவுளோடு சங்கமிக்க ஒரு அறை! அதையொட்டி சமையலறை !!

 பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! 

கிணறு அவசியம்!!

அதனருகில் துவைக்கும் கல்!! 

ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம்

, பலா மரம், வாழை மரம்,

 கொஞ்சம் பாகற்காய் கொடி

, கீரைகள் இப்படி !! 

ஓரிரு பசு மாடு

 இருந்தால் அற்புதம் !!


குக்கிராமத்துக்கு அருகில்

 ஒரு பத்துப் பதினைந்து

கிலோமீட்டர் தூரத்தில்

ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை

டவுனுக்கு போய் ஏதேனும்

அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம் !! 

"வாம்மா கண்ணம்மா

 என்ன டவுனுக்கு

போய்ட்டு வந்தியா?" என்று

 அடுத்த வீட்டு

பாட்டியம்மா விசாரணை !!


காலை எழுந்து

பல்விளக்கியதும் காபி! 

(அது இல்லைன்னா சரிப்படாது!! ) 

அதன் பின்னால் செய்தித்தாள் !! 

அதை ஒரு பத்தி விடாமல்

படித்து முடிக்க வேண்டும்!

 அப்புறம் பழையது !

 தொட்டுக் கொள்ள

 வடுமாங்காய், மோர்மிளகாய்

, அப்புறம் தோட்டத்தில்

 கொஞ்சம் நேரம் வேலை !! 


அதன் பின்னால் குளியல்

! கொஞ்சம் நேரம் கடவுளோடு

. முடிந்ததும் ஊரிலுள்ள 

ஆலயத்தில் வழிபாடு!

முடித்து விட்டு வந்தால்

பதினோரு மணிக்கு சாப்பாடு!!

அதன் பின்னால் வாசல்

 திண்ணையில் ஒத்த வயதுடைய பெண்களுடன் அக்கம் பக்கத்து வயதானவர்களுடன் அரட்டை,

 சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே விமர்சனம்! 

சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால் கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி !!


மதியம் இரண்டு மணி நேரம் தூக்கம்! மாலை ஒரு காபி

! கொஞ்சம் தோட்டத்தில்

 தண்ணீர் பாய்ச்சும் வேலை!

 அப்புறம் ஆற்றங்கரை பக்கம்

 ! அங்கு ஒரு ஏழெட்டு டிக்கெட்டுகள் உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு ஆறு மணி வரை !! 


பின் வீடு திரும்பி

 எளிய டிபன் நாலு இட்லி

 அல்லது இரண்டு சப்பாத்தி ! 

கொஞ்சம் பால் ! 

ராத்திரி திண்ணையில்

பாய் விரித்துக் கொண்டு

அக்கம் பக்கம்

தோஸ்துகளுடன் இருட்டில்

 பேசிக் கொண்டே படுக்கை ! 

தூக்கம் வரும் போது

 தூங்கிப் போகுதல் !! 

முடிந்தால் வாசலில் உள்ள வேப்பமரத்தின்

கீழே கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம் !!


செல்போன் இல்லை,

 கணினி இல்லை,

டிவி இல்லை, பேஸ்புக் இல்லை, வாட்ஸ்அப் இல்லை

 எதுவுமே இல்லை ! உடலில் நோயுமில்லை மனதில் கவலையுமில்லை !! வாய்க்குமா???


வாய்க்காது என் தெரிந்தும் ஆசைபடுகிறது மனது.


இந்த நகர மயமாக்கலான

வாழ்க்கை சூழல்

எல்லாம் நம்மை

உடல் உழைப்பை குறைத்து

போலியான

நாகரீகம்

போலித்தனமான

நட்பு வட்டத்துடன்

உலகம் உங்கள் கையில்

என கைபேசியை

கட்டிக்கொண்டு

வெளி உலக

நிஜ நட்பு உறவை

மறந்து தவிர்த்து 

வாழும் இன்றைய

நகரமயமான

நரக வாழ்வியலை விட


அன்றைய வாழ்வே

என்றும் சிறப்பானது....

அன்புடன்

உங்கள் நண்பன்.. 


இன்றைய நாள்

இனிதாய்

மலரட்டும்



⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Popular posts from this blog

"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை

ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

“நான் சொன்னத அவரு கேக்கல... இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” - நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!