கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு

 கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு



இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "க(ம)லை மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.) ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது, அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில், இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.

Popular posts from this blog

"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை

ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

“நான் சொன்னத அவரு கேக்கல... இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” - நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!